ஒன்றிய அரசை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் தென்னக ரயில்வே எம்பிளாஸ் சங்க (எஸ்.ஆர்.இ.எஸ்.) பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் பவுல்ரெ’ஸ் தலைமை தாங்கினார். துணைப்பொது’செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 41 பாதுகாப்பு உறுபத்தி தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி 76 ஆயிரம் பாதுகாப்பு துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை கைவிட வேண்டும்.
கடந்த மாதம் 30&ந் தேதி இயற்றிய இ.டி.எஸ்.ஓ. அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக நசுக்கி வேலை நிறுத்த உரிமையை பறிப்பதை கைவிட வேண்டும். ரயில்வே உற்பத்தி பிரிவுகள் பணிமனைகளை தனியாரு’கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். ரயில்வே உற்பத்தி பிரிவுகள், பணிமனைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். ரயில்வே நிலங்களை, 15 ரயில்வே விளையாட்டு மைதானங்களை ஆர்.எல்.டி.ஏ. மூலம் தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். 18 மாத டி.ஏ. மற்றும் டி.ஆர். முடக்கியதை வாபஸ் பெற்று
கடந்த 1&ந் தேதி உயர்த்தப்பட்ட டி.ஏ. மற்றும் டி.ஆர். அரியர்சுடன் வழங்க வேண்டும். கொரோனா பரவலின் போது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரி’கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர்கள் சேசுராஜா, சுந்தர், கோட்ட துணை தலைவர் பாலமுருகன், உதவி கோட்ட செயலாளர் சந்திரசேகர், கோட்ட உதவி செயலாளர் ஞானசேகர், செயலாளர் (டீசல் கிளை) பன்னீர்செல்வம், கேரேஜ் கிளை செயலாளர் வடிவேல், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் வெங்கட் நாராயணன் மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு பேட்ஜ் அணி கலந்து கொண்டனர்.

