முகக்கவசம் அணிவது அவசியம் : விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல்துணை ஆணையர்

0 753
Stalin trichy visit

முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஒட்டிகளுக்கு மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருச்சியை பொருத்தவரை கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்பு படியாக குறைந்து வருகிறது.ஆயினும் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நேற்று திருச்சியில் புதிதாக 689 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக காவல்துறையினர் தேவையின்றி வாகனத்தில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று வரை இருசக்கர வாகனம், ஆட்டோ,கார் என6890 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று உலக சுற்று சூழல் தினம் என்பதால் காவல் துறை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி திருச்சி மன்னார்புரம் அருகே வாகனத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும்,இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படும் வேளையில் மரக்கன்று மற்றும் முக கவசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முக்ககவசம் அணிந்து வரவேண்டும்,வீட்டில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.