கால்வாய், வாய்க்கால் கரையோர ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்…. எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உறுதி

0 233
Stalin trichy visit

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ தனது தொகுதிக்குட்பட்ட வரகனேரிதேவதான பாசன கால்வாய்,தாரா நல்லூர் பாசன கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்…கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுக பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வில்லை.அரசு அதிகாரிகளை செயல்படவிடாமல் இருந்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றோம். கடந்த 15 வருடமாக தூர்வாரப்படாமல் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.உய்யகொண்டான் கால்வாயில் சாக்கடை கலப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் சரிவர செயல்படுத்த படாமலும் போதிய பராமரிப்பின்றி உள்ளது.அதன் காரணமாகவே பொதுமக்கள் கழிவு நீரை நேரடியாக உய்யக்கொண்டான் கால்வாயில் கலந்து விடுகின்றனர். இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழாது.திருச்சி மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காகதிருச்சி தெப்பக்குளத்தில் படகுகளை விடுவதற்கு மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் கலந்து பேசி படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி உதவியுடன் உடனடியாக அகற்றப்படும் என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.