கொரோனா காலத்தில் ஏழை. எளியவர்களின் பசியைப் போக்கும் திருச்சி பி.எஸ்.ஆர் டிரஸ்ட்

0 694
Stalin trichy visit

திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருந்து சேவை செய்து வருகிறது பி.எஸ். ஆர் டிரஸ்ட்.எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வெளியுலகிற்கு தன்னை காட்டிக்கொள்ளாமல் சேவை செய்து வரும் பி.எஸ். ஆர் டிரஸ்ட் இந்த கொடிய கொரோனா காலத்தில் வேலையிழந்து பசி, பட்டினியாய் இருப்பவர்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகிறது.கடந்த 23 நாட்களாக மதியமும், இரவும் ஏழைகள், திருநங்கைகளுக்கு உணவளித்து வருகிறது.பி.எஸ்.ஆர் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி ஷேக் அப்துல்லாவே வீதி வீதியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குகிறார்.மதியம் சுமார் 450 பேருக்கும், இரவில் சுமார் 250 பேருக்கும் இவ்வாறு பசியாற்றுகிறார்.பி.எஸ்.ஆர் டிரஸ்ட் நிர்வாகிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தயார் செய்து பார்சலாக கட்டி தரும் உணவு பொட்டலங்களை ஷேக் அப்துல்லா மட்டுமே வீதிகள் தோறும் சென்று வழங்கி வருகிறார்.ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வெளியே சென்றால் விதி மீறலாகலாம் அல்லது தொற்று பரவலாம். எனவே அரசின் அனுமதி பெற்று இவர் மட்டுமே வெளியே சென்று உணவு வழங்குகிறார்.தன்னை யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் பசித்தோருக்கு உணவு பொட்டலங்களை கொடுத்து விட்டு, “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தாரக மந்திரத்திற்கிணங்க இவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பல நாட்களாக இவரை கவனித்த நிலையில் இவர் யார், ஏன் இப்படி தேடிச்சென்று உதவி செய்கிறார், அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா என்ற வினாக்களுக்கு விடை தெரிய ஷேக் அப்துல்லாவை சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது; “தில்லை நகர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் நான் 11ம் வகுப்பு படிக்கும்போது 2011ல் பி.எஸ்.ஆர் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.வழக்கமாக டிரஸ்ட் தொடங்குபவர்கள் காமராஜர் பெயரிலோ, அப்துல் கலாம் பெயரிலோ, அன்னை தெரசா பெயரிலோ தொடங்குவார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல.எங்கள் ஆசிரியர்களான பாண்டியன், சந்தான கோபாலகிருஷ்ணன், ராம்குமார் ஆகியோரின் பெயர்களை கொண்டு இந்த டிரஸ்ட் தொடங்கியுள்ளோம்.2015ம் ஆண்டு டிரஸ்டுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்ததுஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, சத்தான உணவு வழங்குவதே இந்த டிரஸ்டின் முதல் நோக்கம்.பெற்றோர் செய்த தவறுகளாலோ, அல்லது அறியாமையாலோ ஹெச்ஐவி குழந்தைகள் பிறக்கின்றன.எந்த தவறும் செய்யாத அந்த குழந்தைகள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் பி.எஸ்.ஆர் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.இன்று வரை அது தனது லட்சியத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதுவரை 122 பேருக்கு கல்லூரி கல்வி வரை கொடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம்.குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு செவிலியர் பணிகளை வாங்கி கொடுத்திருக்கிறோம்.எங்களால் வேலை வாய்ப்பு பெற்றவர்களும் இப்போது பி.எஸ்.ஆர் டிரஸ்டுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள். இது தவிர டிரஸ்ட் உறுப்பினர்கள் 250 பேரும் மாதம் ரூ.200 தருகிறார்கள்.எங்கள் டிரஸ்டின் நிதி பொறுப்பை டாக்டர் குணசீலனும், செயலாளர் பொறுப்பை பேராசிரியை காயத்ரி பாண்டியனும் கவனிக்கிறார்கள். கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் கஜா புயல் மற்றும் வெள்ளம் பாதித்த நேரங்களிலும் நாங்கள் பல இடங்களுக்கு சென்று உதவி செய்திருக்கிறோம். தொடர்ந்து ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கான சேவைகள் எப்போதும்போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது” இவ்வாறு ஷேக் அப்துல்லா கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.