தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் : திருச்சியில் கடைகள் திறப்பு

0 650
Stalin trichy visit

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறிக் கடைகள் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள்,எழுது பொருள் விற்பனை அங்காடிகள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர பகுதியில் மார்க்கெட் பெரியகடைவீதிகளில் காலை முதல் 6 மணி முதல் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மளிகைப் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.திருச்சி மார்க்கெட் மற்றும்காசி விளங்கி பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மீன் இறைச்சி வியாபாரம் நடைபெறுகிறது. காலை முதலே பலரும் மீன், இறைச்சி, முட்டைகளை வாங்கி சென்றனர்.இதேபோன்று மார்க்கெட் பகுதியில் அரிசி மண்டி,இரும்பு , பெயிண்ட் உள்ளிட்ட hardware கடைகள் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடை பெறுகிறது. ஓரிரு வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். ஆனால் காந்தி சந்தையை சுற்றி அமைந்துள்ள அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் சற்றுஅதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான மளிகை காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.