பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடக்கம்

0 692
Stalin trichy visit

திருச்சி மாநகரில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.ஊரடங்கானது அமலில் உள்ள நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.அந்த வகையில் ஊரடங்கை மீறியதாக 6566 இருசக்கர வாகனங்கள், 195ஆட்டோக்கள், 73 கார்கள் என மொத்தம் 6916 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சிKK நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 15 தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நாளொன்றுக்கு 250 வாகனங்கள் வீதம் இன்று முதல் விடுவிக்க மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார்.அந்த வகையில் கடந்த 15ஆம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன.வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட போது போலீசார் வழங்கிய நோட்டீஸ் நகல், வாகனத்தின் ஆர் சி புக், வாகன உரிமையாளரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இவற்றைநேரில் காண்பித்த பிறகு வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர் உள்ளிட்ட கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.