திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செந்தண்ணீர்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் – போலீசார் விசாரணை
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தநீர்புரம் பாலத்தின் கீழ் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சடலம் கிடக்கும் இடத்திற்கு கயிறு கட்டி இறங்கி சடலத்தை வெளியே எடுத்தனர்.
அதன் பின்பு கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவரின் சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் ரவுடியா? அல்லது வேறு எங்கேயாவது கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்
