திருச்சி மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள் இன்று காலை முதல் திறப்பு : பக்தர்கள் சுவாமி தரிசனம்

0 741
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லைதற்போது கொரோனாதாக்கம் வெகுவாக குறைந்து வருவதை தொடர்ந்துதமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தது.அதன் படி வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் இன்றுமுதல் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை இந்துசமய அறநிலை துறை கட்டுப்பாட்டில்  சுமார் 650 கோயில்கள் உள்ளன.கோவில்கள் அனைத்தும் நேற்றே சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில்,
உறையூர் வெக்காளியம்மன் கோவில், வயலூர் முருகன் கோவில் உள்ளிட்ட கோயில்கள் இன்று காலை  திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல திருச்சியில் புகழ்பெற்ற நத்தர்ஷா பள்ளிவாசல், மேலப்புதூர் புனித தூய மரியன்னை ஆலயம்  உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.