பதுக்கல் மதுவை பல மடங்கு விலைக்கு விற்ற நபர்களை கைது செய்தது போலிஸ்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழன்பில் கிராமத்தில் மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1087 மதுபாட்டில்களை லால்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
லால்குடி அருகே கீழன்பில் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலையடுத்து கீழஅன்பில் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டபோது பழைய சாராய வியாபாரியான அதே பகுதி பட்டி தெருவைச் சேர்ந்த அப்பாவு மகன் பழனிச்சாமி (53) சுப்மணி மகன் முரளி(38),திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த பனையடியான் மகன் கதிரேசன் (24) ஆகியோர் முரளி வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால்அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.பின்னர் அவர்களிடமிருந்து 2 லட்சத்தி 16 ஆயிரம் மதிப்புள்ள 1087 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்,காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மூன்று பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.