பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்திய சமயபுரம் போலீசார் .

0 724
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சமயபுரம் சுங்கச்சாவடி, ஒத்தகடை பகுதிகளில் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் காவலர்கள் கனேஷ்,வீரக்குமார்,திருமேணி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த பொது மக்களுக்கு சமயபுரம் காவலர்கள் முககவசம் வழங்கி கிருமிநாசினி கொடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். அப்போது முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது.கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தேவையின்றி ஊர் சுற்றக் கூடாது.முக கவசம் அணியாமல் வெளியில் எங்கும் செல்லக்கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கியும் எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.