பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அரசு பள்ளி மாணவர் கடிதம்

0 702
Stalin trichy visit

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்,கணினி & எழுத்து பயிற்சி,நடனம்,யோகா & தற்காப்பு பயிற்சி போன்றவை அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டி கொப்பம்பட்டியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்

 

திருச்சி துறையூரை அடுத்த கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் மகா பதஞ்சலி.

கொப்பம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்லும் மகா பதஞ்சலி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கொடுக்கும் ஸ்மார்ட் வகுப்புகள்,கணினி எழுத்துப் பயிற்சி நடனம் இசை,யோகா தற்காப்பு பயிற்சிகள் போன்றவை  அரசு பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக அதனை கடிதமாக தமிழக முதல்வர் மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார்.

அதே போல் அரசு பள்ளியில் படித்து தான் டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆனார் என்றுன்,விஞ்ஞானி சிவம் பல ஆசிரியர்கள் மருத்துவர்கள் இன்று உயர்ந்த பதவியில் உள்ளனர் என்றால் அதற்கு காரணம் அரசு பள்ளி தான் என்று சுட்டிக்காட்டி அந்த கடிதத்தில் மாணவர் மகாபதஞ்சலி  எழுதியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.