புள்ளம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 4 பேர் கைது : காவல்துறை நடவடிக்கை

0 702
Stalin trichy visit

கல்லகத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்ற 4 பேர் நேற்று கைது.15 லிட்டர் சாரயம் பறிமுதல். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகம் கிராமம் ஆன்டி ஓடை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்ற 4 பேரை கல்லக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர்.கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது குடிப்பதற்குதிண்டாடி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி கல்லகம் கிராமத்தில் உள்ள ஆண்டி ஓடை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்ப்பதாக கல்லக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த லால்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கல்லக்குடி உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர்கள் கல்லகம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டி ஓடை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அப்போது சிலுவைப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஞானபிரகாசம் மகன் அன்புராஜ்(33), அதே பகுதியைச் சேர்ந்த சிமியோன்மகன் செபஸ்தியார்(29),பன்னீர்செல்வம் மகன் மூக்கன் என்கின்ற குமார்(40) மற்றும் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சுந்தர்ராஜ்(57) என தெரியவந்தது.பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 15 லிட்டர் சாரயம்,2 பேரல்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி மகிளா நீதிமன்றம் எண் 2 ல் ஆஜர்படுத்தி மணப்பாறை கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.