மண்ணச்சநல்லூர் கடைவீதியில் ஊரடங்கு விதிமுறையை மீறிய மளிகை கடைக்கு வருவாய் துறையினர் சீல்

0 234
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் ஊரடங்கு உத்தரவு விதிமுறையை மீறிய மளிகை கடைக்கு மண்ணச்சநல்லூர் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.மண்ணச்சநல்லூர் அம்மையப்பா நகரைச சேர்ந்த முத்துசாமி மகன் 39 வயதான கோபிநாத். இவர் மனச்சநல்லூர் கடைவீதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக பொதும்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.இந் நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக கடை திறத்திருந்தால் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மணச்சநல்லூர் வருவாய் துறையினர் மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.