திருச்சி விமான நிலையத்தில் 1.92 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வீட்டு உபயோக பொருளில் மறைத்து எடுத்துவந்த 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.

இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 1.92 கோடி கடலூரைச் சேர்ந்த மாரிமுத்து வினோத் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இப்ராஹிம் சாகுல் ஆகிய இருவரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.