10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

0 485
Stalin trichy visit

திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 10 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் அரியலூர் மாவட்டம் திருமானூருக்கும், அரியலூர் மதுவிலக்குபிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பெரம்பலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி சரக காத்திருப்போர் பட்டியலுக்கும், திருவாரூர் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கும், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் சரக காத்திருப்போர் பட்டியலுக்கும், உணவு கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் கோபி அரியலூர் மீன்சுருட்டிக்கும், சேலம் மாநகரில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் திருச்சி மாவட்டம் சமயபுரத்துக்கும், நாகப்பட்டினம் இன்ஸ்பெக்டர் தமிழரசி பெரம்பலூர் மதுவிலக்கு பிரிவுக்கும், சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுப்பிரமணி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பி.பொன்ராஜ் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போக்குவரத்துபிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி.ராதிகா பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.