திருச்சியில் 1084 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்; முதல்வர் தொடங்கி வைக்கிறார்

0 489
Stalin trichy visit

இன்று காலை தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிறகு திருச்சி தாயனூர் அருகே உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 28.24 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், ரூ11.36 கோடியில் லேசர் லைட் உள்ளிட்ட மலை கோட்டையை அழகுபடுத்தும் பணி, ரூபாய் 10 கோடியில் ரைபிள் கிளப் உள்ளிட்ட 10 துறைகளைச் சேர்ந்த ரூ .153 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கும் வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ரூபாய் 140 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூபாய் 76 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம், ரூ .75 கோடியில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தால், ரூ11.50 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை ரோடு மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில், மாநகராட்சி சேவை மையம் மற்றும் ஆலோசனை மையம் கட்டும் பணி,

ரூபாய் 26 கோடியில் பிரதான சாலைகள் சீரமைப்பு பணி, ரூபாய் 140 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட 10 துறைகளைச் சேர்ந்த 604 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் இவ்விழாவில் 28 அரசுத்துறைகள் மூலமாக 45344 பயனாளிகளுக்கு 327 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.

இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட பலரும் கொடுத்த மனுக்கள் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதில் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதன் வாயிலாக ரூபாய் 1084 கோடி மதிப்பிலான வளர்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி மாவட்ட மக்களுக்கு முதல்வர் வழங்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.