கருப்பு உடை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள்

0 246
Stalin trichy visit

உப்பிலிபுரம் பேரூராட்சி துணைத் தலைவரை கண்டித்து கருப்பு உடை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சியில் அவசர கூட்டம் பேரூராட்சி தலைவர் சசிகலா தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேர் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற தினசரி காய்கறி சந்தைக்காக நடைபெற்ற ஏலத்தில் ரூபாய் 5 லட்சத்திற்கு ஏலம் எடுத்த பேரூராட்சியின் துணை தலைவர் சித்ரா கணவர் செந்தில்குமார் என்பவர் ஏலம் எடுத்து ஏலத் தொகையை கட்டவில்லை எனவும் அந்த ஏலத்தை செல்லாது என அறிவித்து மீண்டும் புது ஏலம் விட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது துணைத்தலைவர் கணவரின் இந்த செயலால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படும் எனவும் கூறி அதிமுக கவுன்சிலர்கள் ராஜாங்கம் பானுமதி சங்கீதா ச பொன்மணி ரேவதி ஆகியோர் கருப்பு உடை அணிந்து வந்ததாக தெரிவித்தனர் மேலும் வருகாலத்தில் ஏலத் தொகையை கட்டாத செந்தில்குமார் கலந்து கொள்ள கூடாது எனவும் அவர் முன்பணமாக வைத்த 30 ஆயிரம் ரூபாய் திருப்பி தரக்கூடாது எனவும் தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து பேரூராட்சி கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஏலம் அடுத்த தேதியில் நடைபெறும் எனவும் முடிந்த ஏலம் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . அதிமுக கவுன்சிலர்கள் திமுக துணைத்தலைவரின் கணவரை கண்டித்து கருப்பு உடை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.