வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது

0 341
Stalin trichy visit

திருச்சி வயலூர்ரோடு சீனிவாசாநகரை சேர்ந்தவர் ஷாம் கோகுல் (வயது 24). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் குழுமாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து, சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து ஷாம்கோகுல் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், புத்தூர் சீனிவாசாநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (24), பிரகாஷ் (22) ஆகியோர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.