தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது

0 357
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கடைவீதி மற்றும் பூனாம்பாளையம் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருப்பைஞ்சீலி பூனாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர் விசாலையில் திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்த 43 வயதான கம்மங்கூழ் என்கின்ற முத்துகிருஷ்ணன் மற்றும் மணச்சநல்லூர் அருகே பூணாம்பளையம் மேலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வடமலை ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து தெரியவந்தது. அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூபாய் 610 பறிமுதல் செய்து மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பின்னர் மணச்சநல்லூர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.