வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு
திருச்சி, ஜன.5 வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை (வண்டி எண் 06036) வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலை நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், சிவகாசி, ராஜாபாளையம், தென்காசி வழியாக அடுத்த நாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்று அடைகிறது. இந்த ரயில் 8, 15, 22, 29-ந்தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக (வண்டி எண் 06035) எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை 7, 14, 21, 28- ஆம் தேதிகளில் நீட்டிக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியை அடைகிறது. இந்த தகவலை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.