தெருவிளக்குகளை சரிசெய்யும் பணியில் கவுன்சிலர் செந்தில்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் கமலா நேரு தெரு, காந்தி தெரு, பிளோமினால்புரம், இளங்கோதெரு, அந்தோனியார் கோயில் தெரு,

போஸ் தெரு ஆகிய இடங்களில் தெரு விளக்குகளை ஆய்வு செய்து அதில் எரியாத விளக்குகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.