ரூ.24.8 கோடி ரூ.24.8 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணி : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார் கூட்டு குடிநீர் திட்ட பணி : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

0 244
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி ஊராட்சியில், லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே. என்.நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 36.84 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி, கண்காணிப்பு பொறியாளர் மாதவன், இலால்குடி கோட்டாட்சியர்  வைத்தியநாதன், ஒன்றிய குழு தலைவர்கள்  ரஸ்யா ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரெட்டிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு. தங்கவேல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.