திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்த போது. கீரனூரி பள்ளத்துப்பட்டி மணி விஜய் நகர் ரயில்வே பாலம் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை விசாரணையில், ஆடு திருடும் கல்லணை தோகூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன்(வயது 19) என்பவரும், அவருடன் புதுக்கோட்டை மாவட்டம் சத்திய மங்களம் அன்னப்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுவனும், புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி, வடகாட்டுபட்டியை சேர்ந்த 9 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.