கத்தியை காட்டி மிரட்டி பைக்- செல்போன் பறித்த 3 பேர் கைது
திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நித்திஷ்குமார்(21). கூலி தாழிலாளியான இவர் நேற்று புத்தனாம்பட்டியில் இருந்து எதுமலைக்கு சென்று எதுமலை உப்பாற்று பாலம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, நித்திஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்போன் மற்றும் மாட்டார் சைக்கிளை பறித்தவர்கள் முசிறி தண்டலைப்புத்தூரை சேர்ந்த சுரேஷ்(24), துறையூரை அடுத்த மருவத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார்(24) மற்றும் டி.புதுப்பட்டியை சேர்ந்த வினித்(21) மற்றும் வாத்தலையை சேர்ந்த வடிவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். வடிவேலை தேடி வருகின்றனர்.