சாலை விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

0 447
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரத்தில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். லால்குடி அருகே திண்ணியம் தேவன்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் 50 வயதான ரவி. இவரது உறவினர்களான 25 வயதான ராம்குமார், மற்றும் 6 வயதான குழந்தை நகுலேஷ். இவர்கள் மூவரும் மோட்டார் பைக்கில் திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல் லால்குடி அருகே மாந்தரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சையது முஸ்தபா மகன் 25 வயதான ஆரிப் அகமது லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அகிலாண்டபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் பைக் மீது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உட்பட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.