பாரத சாரண, சாரணியர் இயக்க பெருந்திரள் அணி நிறைவு
திருச்சி, டிச.5 தமிழ்நாட்டில் சாரண இயக்க பயிற்சி முகாம்கள், பெருந்திரளணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மண்டலங்களை சேர்த்து 10 மாவட்டங்களில் 40 சாரண மாவட்டங்கள் உள்ளடக் கிய கிழக்கு மண்டல பெருந் திரளணி திருச்சி ஜெ.ஜெ. கல்லூரியில் டிச.2 துவங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் 326 சாரணர்கள், 293 சாரணியர்களும், 58 சாரண ஆசிரியர்களும், 67 வழிகாட்டிகளும் என மொத்தம் 744 பேர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மண்டலத்திற்கான பாரத சாரண, சாரணியர் பெருந்திரள் அணி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது.
பாரத தமிழ்நாடு சாரண, சாரணியர் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசும் போது, பயிற்சி பெற்ற மாணவர் ளுக்கு இந்த மூன்று நாட்கள்
உங்களது வாழ்நாளில் முக் கியமான நாள். ஸ்கவுட்ஸ் ‘அண்டு கைட்ஸ் என்ற வார்த்தை தமிழ்நாடு சட்ட மன்ற அவைக்குறிப்பில்
முதல் முறையாக பதிவேற்றம் செய்து ரூ.25 லட்சம் பெற்றுத்தந்துள்ளோம் என்றால் இதற்கான முக்கி யத்துவத்தை எந்தளவுக்கு
தமிழ்நாடு முதலச்சரும், துறையைச் சார்ந்த நாங்களும் கொடுக்கிறோம் என்று மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு சேவை செய்வது, வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது, ஒழுக்கம், தூய்மை, சிக்கனம் போன்றவற்றை சாரண, வாக்கை சாரணியர் இயக்கம் கற்றுத் தருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் நிரூபிக்கும் இயக்கமாக நம் இயக்கம் செயல்படுகிறது. 1909 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த பேரணியில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் பெண்களும் ஆண்கள் போல வேடமிட்டு பங்கேற்றனர். இதை கவனித்த இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவுல், தனது தங்கை ஆக்னஸ் மித்தை அழைத்து உடனடியாக சிறுமியருக் கான இயக்கத்தை உருவாக்க அறிவுறுத்தினார். எந்த பள்ளிக்கு சென்றா லும், சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது சாரண, சாரணியர் யார்? யாரெல்லாம் இருக்கிறீர்கள்? உங்கள் பயிற்சி ஆசிரியர் என்று கேட்பதையும் வழக்கமாக வைத்துள் ளேன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது 10 நாட்கள் என்சிசி கேம்ப் சென்றுள்ளேன். அன்று நான் ஏதை கற்றுக்கொண்டேனோ, அதை இன்று முறையாக பயன்படுத்தக்காரணம் எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் தான் என்று கூறினார். பேசினார்.
விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலர் மற்றும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ் வரவேற்றார். சவு டாம்பிகா கல்வி குழுமத் தலைவர் ராமமூர்த்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி நன்றி கூறினார்.