
கடந்த 11.06.22-ந்தேதி மேலக்கல்கண்டார்கோட்டை சோமசுந்தரம்நகர் சுடுகாட்டு பகுதியில், 19 வயது இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் எதிரிகள் 1)காட்டுமலை (எ) அருண்குமார் த.பெ.செல்லப்பன் 2)மணிகுண்டு (எ) மணிகண்டன் த.பெ.சக்திவேல் 3)ஹரீஸ் த.பெ.மேகன்ராஜ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எதிரிகள் 1)காட்டுமலை (எ) அருண்குமார் 2)மணிகுண்டு (எ) மணிகண்டன் 3)ஹரீஸ் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட முயற்சிப்பதும், ஆயுதங்களை கொண்டு கொலை செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், எதிரிகளின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click the image to chat on whatsapp