திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஆலோசனைக் கூட்டம்..
இன்று காலை 11 மணியளவில் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் திருச்சி மாவட்ட டிடோஜாக்
மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயலாளரும், டிடோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான
திரு.கோ. நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…
வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 5.30மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்தை இருக்கும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது…

click the image to chat on whatsapp
இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளரும், டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான *திரு.சே.நீலகண்டன் அவர்கள் கோரிக்கை விளக்க உரையும், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும், அதிகமான ஆசிரிய பெருமக்களை பங்கு பெற செய்வது குறித்தும் விரிவாக விளக்க உரையாற்றினார்…
கூட்டத்தில் தோழமை சங்க நிர்வாகிகள் திரு எட்வர்ட் ஆரோக்கியராஜ்,
ராஜேந்திரன் , பாக்கியராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார்..
இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட தலைவர்
ம. சேவியர் பால்ராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர்
ஆ. கலியபெருமாள் வட்டார செயலாளர்கள் வையம்பட்டி மு சேகர்
மருங்காபுரி மு.சுரேஷ்ராஜ்
தொட்டியம் *வே.சிவக்குமார்
மேற்கு சரக ராபர்ட் அந்தோணி ராஜ்
மாவட்ட துணைச் செயலாளர்
ஐசக் டேவிட் மாநில பொதுக்குழு உறுப்பினர்
மணி பாரதி
வையம்பட்டி வட்டாரத் துணைத் தலைவர்
ராஜா
இயக்க உறுப்பினர் திரு .ரகுபதி மருங்காபுரி வட்டார இயக்க பொறுப்பாளர்கள் திரு.ஜான் கபிஸ்ட்ரான்,
ஜான் வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு திருச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்ட வட்டாரங்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது..
1. திருச்சி நகரம்
2. மணப்பாறை
3. வையம்பட்டி
4. திருச்சி மேற்கு
5. அந்தநல்லூர்
6. ஸ்ரீரங்கம்..
நிறைவாக தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி அவர்கள் நன்றி உரையாற்றினார்…