தாயானூரில் 4 பவுன் செயின்,தோடு மூக்குத்திக்காக கொடூரமாக அடித்துக் கொலை : எஸ்.பி. நேரில் ஆய்வு

0 758
Stalin trichy visit

சோமரசம்பேட்டையை அடுத்த தாயனூர் கிராமத்தை சேர்ந்த அக்கமா (65) இன்று காலை மாட்டிற்கு புல் அறுப்பதற்க்காக தோட்டத்திற்கு சென்று பரித்து கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் அக்கம்மாள் இன் கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொன்று விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின்,ஒரு காது தோடு,இரண்டு மூக்கில் இருந்த சுரை மூக்குத்தி உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் டிஎஸ்பி வாசுதேவன் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அருகில் கட்டிட வேலையில் ஈடுபட்டுவந்த கொத்தனார்,சித்தால்கள் மற்றும் சில தொழிலாளர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்காமாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – செயின் தோடு மூக்குத்தி உள்ளிட்ட நகைக்காக மூதாட்டி கொடூரமாக கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.