43வது வார்டு தி.மு.க. வேட்பாளர் செந்தில் தனது மனைவியுடன் வாக்கு சேகரிப்பு!
திருச்சி மாநகராட்சி 43வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது மனைவியுடன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர்கள் மூத்தோர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று பிரச்சாரம் செய்தனர். அப்போது தான் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களை 43வது வார்டுக்கு கொண்டு வருவேன் என்பவற்றை எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.