மக்கள் பணியில் 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகரில் உள்ள சத்துணவு கூடத்தில் பழுதடைந்துள்ள கட்டிடத்தையும், காவேரி நகரில் உள்ள நாடார் சமுதாயக் கூடத்தின் பின்புறம் தனிநபர்கள் சாக்கடை கட்டளையின் மேலே சுவர் எழுப்பி உள்ளதையும், குறிஞ்சி நகர் எட்டாவது தெரு முதல் பதிமூன்றாம் தெரு வரை தண்ணீர் சரியாக வராமல் இருப்பதை சரி செய்யும் பணியினையும் J.E.நரசிம்மமூர்த்தி உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.