அறிவை வளர்க்கும் அஞ்சல் தலை சேகரிப்பு
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் அறிவை வளர்க்கும் அஞ்சல் தலை சேகரிப்பு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் அறிவை வளர்க்கும் அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து பேசுகையில், அஞ்சல் தலை சேகரிப்பு வெறும் பொழுதுபோக்கு மட்டுல்ல. பொது அறிவை , வரலாற்றை எளிய முறையில் கற்றுக்கொள்ளும் செயல்வழிக் கற்றல் முறை ஆகும். அஞ்சல் தலையில் பொது பயன்பாடு அஞ்சல் தலை, நினைவார்த்த அஞ்சல் தலை, குறு வடிவ அஞ்சல் தலை என பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் தலையினையும் அறிந்து கொள்ளும் பொழுது அஞ்சல் தலை சேகரிப்பு அறிவை வளர்க்கும் கலையாக அமையும் என்றார். தொடர்ந்து
அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்கு மெகதூத் அஞ்சல் அட்டையினை வழங்கினார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா, சுரேஷ், சசிகலா, லக்க்ஷனா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் முன்னதாக திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்க, இணைச் செயலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்