காதல் ஜோடியை தாக்கி பணம் பறித்த சிறுவன் உள்பட 5 பேர் கைது

0 219
Stalin trichy visit

திருச்சி, ஆக.12  திருவெறும்பூர் அருகே  காதல் ஜோடியை தாக்கி  பணம் பறித்தசிறுவன் உட்பட ஐந்து பேர் கைது

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சமாதானப் புரத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் பிரகாஷ் (22) இவர் தனியர் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும்  வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி இரவு பிரகாஷ் தனது காதலியுடன் பேசி கொண்டிருந்த போது கூத்தைப்பார் பகுதியை சேர்ந்த 4 பேர் மற்றும் நடராஜபுரத்தை சேர்ந்த ஒருவன் என 5ஐந்து பேர் குடிபோதையில் வந்து பிரகாசையும் அவனது காதலியையும் மிரட்டியதோடு பிரகாஷை தனியே இழுத்துச் சென்று முள்காட்டில் வைத்து அடித்து துன்புறுத்தியதோடு பிரகாஷிடம் இருந்து ரூ 5 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். மேலும் அவருடைய  காதலியிடம் இருந்து மிரட்டி ஜி பே மூலம் ரூ 3 ஆயிரத்தை பெற்றுள்ளனர். பின்னர் பிரகாஷின் ஆடைகளை பறித்துக் கொண்டு ஜட்டியோடு விரட்டி அடித்துள்ளனர்.

இது சம்பந்தமாக பிரகாஷ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கூத்தைப்பார் வடக்கு அர்ஜுன தெருவை சேர்ந்த மருதராஜ் மகன் ஐயப்பன் (25), அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜய் (26), ரவி மகன் கேசவன் (20), நடராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் ரவிசங்கர் (36) மற்றும் கூத்தைப்பாரை சேர்ந்த 17 வயது சிறுவன் என ஐந்து பேரும் தான் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் ஐந்து பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.