மனு வழங்கிய மாற்றுத்திறனாளி – உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முசிறியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமர் – துளசிமணி தம்பதியினரின் மகள் பூரணம்(23) என்பவர் இரண்டு கால்கள் பாதிப்படைந்து நடக்க இயலாத நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சக்கர நாற்காலி கேட்டு இன்று மனுவினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7500 மதிப்புள்ள சக்கர நாற்காலியை இரண்டு கால்களும் செயலிழந்த பூரணத்திற்கு இன்று வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பயனாளி பூரணம் தமிழக அரசிற்கும் மாவட்ட ஆட்சியருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உடனிருந்தார்.