0 127
Stalin trichy visit

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தனர்.

அதில்,விவசாயி போதாவூர் ஒண்டிமுத்து பேசுகையில் …

மல்லிகை, முல்லை, ரோஜா பூ உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களுடைய விளை பொருளுக்கு, நிரந்தரமாக உரிய விலை கிடைக்கும் வகையில், திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

வாழை விவசாயி சக்திவேல் பேசுகையில்…
நேந்திரம், பூவன் ஆகிய வாழை பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். யூரியா மட்டுமே மானிய விலையில் கிடைக்கிறது. இதர உரம், பூச்சி மருந்து மற்றும் வாழை மரத்திற்கு முட்டுக்கொடுப்பதற்கான சவுக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வாழை விளைவிப்பதற்கான உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, மானியத்துடன் உரம், பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இயற்கை விவசாயி தர்மராஜ் பேசுகையில் …

முட்டை விலை உயர்ந்து வரும் நிலையில், வாழை உற்பத்தியில் சாதனை படைத்துவரும் திருச்சி விவசாயிகளிடம் இருந்து வாழைப்பழங்களை கொள்முதல் செய்து, சத்துணவு திட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதனால் வாழை விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும் என்றார்.

விவசாயி ரஜ்ஜித் பேசுகையில் …

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே 10 கிலோமீட்டர் தூர இடைவெளியில், தடுப்பணைகளை அமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்றார்.

விவசாயிகள் சொன்ன கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசுகையில்…

மத்திய அரசு விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்கும் காலத்தில், இப்பகுதியில், மலர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்துக்கொடுக்கப்படும். விவசாயிகளின் விளை பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் அமைத்து தரப்படும்.

ஆட்சிக்கு வந்தவுடன் நெல் மற்றும் வாழைக்கான ஆதார விலை உயர்த்தி தரப்படும்.

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கற்றுத் தரப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் வாக்குறுதி கொடுத்துள்ளார் இதுவரை தமிழ்நாட்டில் எந்த தடுப்பணையும் கட்டப்படவில்லை.

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது:

எட்டரை கிராமம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மலர்கள் அதிகமாக விளைச்சல் செய்யப்படுகிறது ஆகையால் இந்த பகுதியில் சென்ட் ஆலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதேபோன்று நெல் மற்றும் வாழைக்கு ஆதார விலை உயர்த்தி தர வேண்டும், குறிப்பாக போதாவூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் இல்லாததால் சமூதாய கூடங்களில் மாணவர்கள் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள். ஆகவே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற உடன் இந்த கிராம மக்களின் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். மேலும் கிளை வாய்க்கால்களை தூர்வாராமல் விவசாயிகளின் நலனை கண்டு கொள்ளாமல், தமிழ்நாடு முதல்வர் தனது மகன் துணை முதல்வரை, முதல்வராக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார், அதற்காக தான் கூட்டணிகளை இழுத்துப் பிடித்து வருகிறார்.

விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மத்திய அரசு முடித்து விட்டது. மேலும் தரமான விதைகள் வழங்குவதை வேளாண் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.