அரசுமருத்துவமனை செவிலியரிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு

0 420
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் ஆனந்தி (43). மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ரோஸ்லின் ஆனந்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தாலி செயினை வலுக்கட்டாயமாக அடித்து பறித்துச் சென்றுள்ளார். இதில் அவருக்கு நெற்றி மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் வெள்ளக்கல், காசா நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆராயி ( 65) என்வரிடம் மர்மநபர் நகையை பறிக்க முற்பட்டபோது அவர் கூச்சலிட்டதால் மர்மநபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.