புதர்மண்டிய மயான பாதை; இன்னல்களை சந்திக்கும் கிராம மக்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் தேவேந்திரகுல வேளாளருக்கான மயானம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் பாதை, மெயின் சாலையில் இருந்து 700 மீட்டர் நீளத்திற்கு தள்ளி உள்ளது.
மேலும் இந்த மயானத்திற்கு செல்லும் பாதை புதர்மண்டிய நிலையில், சவ ஊர்வலத்தின் போது பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவராசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.