திருச்சி தெற்கு மாவட்டம் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு நகர்ப்புற வீடு அற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களுக்கு அன்னதானமும், அவர்களுக்கு தேவையான பெட்ஷீட் மற்றும் ஆடைகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை அமைப்பாளர்கள் மீனாட்சிசுந்தரம், ரவி, செந்தில், ராஜலிங்கம், சிங்காரவேலன், வெங்கடேஸ்வரன், சுந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெய் செய்திருந்தார்.