திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் காணிக்கையை எண்ணும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன், மேலாளர் உமா, உள்துறை காண்காணிப்பாளர் மா.வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றது.
