திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து செங்கற்சோலையை சேர்ந்த பெரியசாமி மகன் சிவக்குமார் என்ற சோலை சிவா(வயது 50). ரியல் எஸ்டேட் அதிபரும், விவசாயியுமான இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேசுவரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். அதாவது, விக்னேசுவரனுக்கு வலது கைபோல செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சிவக்குமார் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் அடையாளம் தெரிந்த 2 நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும், கண் இமைக்கும் வேளையில் தாங்கள் தயாராக கொண்டு சென்ற சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக அடித்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதேப்பகுதியில் உள்ள சுடுகாட்டையொட்டி உள்ள இடத்தை பட்டா போடுவது தொடர்பாகவும், அதேபோல் அப்பகுதியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் அறக்கட்டளை அமைத்தது குறித்து சிவக்குமாருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். விவசாயி சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி(வயது 35) சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு யோகேஷ் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். கணவர் சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ்காந்தி நகரில் உள்ள செங்கதிர்சோலை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினர். அதற்கு என கணவரும் உடைந்தை என எங்கள் ஊரைசேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா, நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதைராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சினை செய்து கொண்டிருந்தனர்.
அந்த விரோதம் காராணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின் தலை ஆகியவற்றில் அடித்தனர். தடுக்க சென்ற என்னிடம், அடுத்து விக்னேசுவரன்தான் என சொல்லி விட்டு தப்பி ஓடி விட்டனர். என் கணவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே, என் கணவரை கொலை செய்த பிரபாகரன், தீபக் மற்றும் கொலைக்கு தூண்டிய கதிர்வேல், ரவி முருகையா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
திமுக செயலாளர் கதிரவன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டி உள்ள இடத்தை பெறுவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை அமைத்தது உரித்து சிவகுமாருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது மேலும் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர் இந்த கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் சிவகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.