மலை தேனீக்கள் கடித்து 20 பேர் காயம்

0 324
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வ.கூடலூர் ஊராட்சி வந்தலை- காணகிளியநல்லூர் இடையே உள்ள நந்தியாறு பாலம் அருகில் ஒரு புளியமரம் உள்ளது. அந்த புளிய மரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. தொடர் மழையால் புளிய மரத்துக்கு அருகே உள்ள அரசமரத்தில் காய்ந்த விறகு குச்சி பட்டு மலைத் தேனீக்கள் பறக்க ஆரம்பித்தது. அந்த வழியாக வேலைக்கு செல்ல வந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை தேனீ கொட்டியது.

இதில் ஆரோக்கியமேரி (வயது 59), மார்ட்டின் (வயது 50), பாசில் (வயது 35), ராகுல் (வயது 15), ஊமைச்சியம்மாள் (வயது 80), அந்தோணிசாமி சேவியர் (வயது 40), இருதயசாமிமார்டின் (வயது 50), பவுல்ராஜ் (வயது 15) மற்றும் பொன்னுசாமி, டெய்சிராணி, ஜெசிந்தா, செபஸ்தியம்மாள், திரவியம் உள்ளிட்ட 20 பேருக்கு தேனீக்கள் கடித்தது. பகுதிவாழ் பொது மக்கள் தகவலறிந்து ஓடிச்சென்று பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள காணகிளியநல்லூர் அரசு மருத்துவமனையிலும் பெருவளப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். மேலும் ஊமைச்சியம்மாள் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல் புள்ளம்படி தீயணைப்புத் துறையினரிடம் கூறினார். தகவலறிந்து புள்ளம்பாடி தீயணைப்பு துறை நிலைய அதிகாரி கோபண்ணா, சிறப்பு படைவீரர் பாரதி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைத்தேனீ கூட்டினை தீயணைப்பு வண்டி மூலம் மருந்து கலந்து பீச்சியடித்து கூட்டை கலைத்தனர். இதனால் இப்பகுதியில் மிகவும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் மலைத்தேனீ கூட்டை அழித்த பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.