திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரவி(வயது 57). கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி, மகன் மதன், மருமகள் விஜிதா, நண்பரின் மகன் பிரசாந்த் ஆகியோருடன் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலுக்கு சாமி கும்பிட தனது சொந்த காரில் சென்றுள்ளனர். காரை ரவியின் மகன் மதன் ஓட்டிச் செல்லும் பொழுது, பாலக்காட்டின் அருகே முன்னே சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
அடர்ந்த பனிமூட்டத்தின் காரணமாக நடந்த இவ்விபத்தில், ரவியின் மனைவி தமழ்செல்வி (வயது 53), பிரசாந்த்(வயது 18) ஆகிய இருவரும் சம்பவ இபத்திலேயே உயிரிழந்தனர். விஜிதா மூளைச்சாவு அடைந்த நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.