பி.ஜே.பிக்கு மாற்று இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமே; திருநாவுக்கரசர் பெருமிதம்

0 287
Stalin trichy visit

திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறுகையில், திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் தொகை அதிகம் உள்ள இடம், அதேபோல் வெளியூர் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஒரு இடம், பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையம், ரிங் ரோடுகள் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. எனவே இங்கு உள்ள சாலை பிரச்சனைகள் வரும் நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்றார்.

தேசிய அளவில் 3வது அணியை மம்தா பானர்ஜி உருவாக்குவதில் முனைப்பு காட்டி விடுகிறார் என்கிற கேள்விக்கு?
யார் வேண்டுமானாலும் பிரதமராக வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடலாம். ஆனால் பி.ஜே.பிக்கு மாற்று இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமே, அதேபோல் நரேந்திர மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமர் என்றால் கண்டிப்பாக அது ராகுல் காந்தி தான். இந்தியாவில் தற்போதைய நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மாற்று என்றால்…. மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மிக பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் மட்டுமே.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்த கேள்விக்கு?
அமைச்சராக வேண்டும் என்றால் அதற்கு பிரதானமானது சட்டமன்ற உறுப்பினர் பதவி. எனவே உதய நிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.