திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கருணாநிதி பெயர் பொறித்த திறப்பு விழா கல்வெட்டு சீரமைப்பு!
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி பெயர் பொறித்த திறப்பு விழா பலகை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று திறந்து வைக்கப்பட்டது.திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 தேதி அப்போதைய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.அதை நினைவுகூறும் வகையில் கருணாநிதியின் பெயர் பொறித்த திறப்புவிழா பலகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பறை பகுதியில் நிறுவப்பட்டது.இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியை இழந்து அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் மறைக்கப்பட்டன.கடந்த பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சிறப்பாக கட்டி முடித்து அதை திறந்து வைத்தவர் பெயர் மறைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில் சுவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் எடுக்கப்பட்டு அந்த எழுத்துக்கள் வெளியில் தெரியும் படி உள்ளது. இது திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.