கிணற்றில் மூழ்கி தாத்தா, பேத்தி பலி
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள தோப்புபட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 70). இவரது மகன் பெருமாளின் மகள் சத்யபிரியா(வயது 17). இவர் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கசென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிணற்றில் இறங்கி தேடியபோது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுதொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அங்கிருந்தவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் மூழ்கி உயிரிழ்ந்த செல்லம்மாள், சத்யபிரியா ஆகியோர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.