ஸ்ரீரங்கத்திற்கு ரூ.89.13 லட்சம் வருவாய்!

0 268
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம் தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம். அதன்படி, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஆய்வாளர் பாஸ்கரன், மேலாளர் உமா மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.89 லட்சத்து 13 ஆயிரத்து 913, தங்கம் 165 கிராம், வெள்ளி 1 கிலோ 164 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்தது. மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் ஆங்காங்கே வைக்கப்பட்ட தற்காலிக உண்டியல்களில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 210 காணிக்கை வந்தது.

Leave A Reply

Your email address will not be published.