நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.