பாஜக சார்பில் ரத்த தான முகாம்

0 471
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடைவீதியில் உள்ள வாசவி மஹால் திருமண மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

ரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், பழச்சாறுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் அஞ்சாநெஞ்சன் மாவட்டச் செயலாளர்ஜெயந்தி தனபால்,  இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன், நகர தலைவர் சரவணன் , இளைஞர் அணி நகர தலைவர் பிரவின், முன்னாள் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சம்பத் குமார், நகர மகளிர் அணி தலைவர் கமலி, நகர பிரச்சாரப் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.