சாரநாதன் பொறியியல் கல்லூரி தன்னார்வலருக்கு விருது

0 443
Stalin trichy visit

ஆளுமைத்திறன் கொண்ட தன்னார்வலர்களை ஆண்டுதோறும் கௌரவித்து வரும் அண்ணா பல்கலைக் கழகமானது தொடர்ந்து இம்முறையும் 2020-2021-ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை 29.12.2021 அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கி சிறப்பு செய்துள்ளது.

இவ்விருதிற்காக தமிழ்நாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வல்லுநர் குழுவின் பரிசீலனை மற்றும் பரிந்துரையின்படி திருச்சி மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர், பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் A.ரெத்னகுமாரின் எழில்மிகு சேவையை பெருமிதப்படுத்தும் பொருட்டு 2020-2021-ம் ஆண்டின் பல்கலைக்கழக அளவிலான “சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்” எனும் விருதினை வழங்கி கௌரவித்தது. இவ்விருதுடன் சாரநாதன் பொறியியல் கல்லூரியானது பல்கலைக்கழக அளவில் 6 நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.