திருச்சி திருவளர்ச்சோலையில் வசித்து வந்தவர் கண்ணதாசன்(வயது 32). இவரது மனைவி லாவண்யா(வயது 30). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணதாசனுக்கு கடந்த சில நாட்களாக குடிப்பழக்கம் ஏற்பட்டது. கடந்த 13ம் தேதி வீட்டில் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த கண்ணதாசன், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விஷம் அருந்த முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த லாவண்யா, கணவர் கையில் இருந்த விஷத்தை பிடுங்கி அவர் அருந்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனே லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.